• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வனசீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் அநுராதபுரம் தலாவ பிரதேசத்தில் அமைந்துள்ள காணியில் தேசிய மிருகக்காட்சிசாலைத் திணைக்களத்தின் ஊடாக சுற்றாடல் பூங்காவொன்றை நிர்மாணித்தல்
- ஆண்டு பூராகவும் உள்நாட்டு மற்றும் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகைதரும் சுற்றுலா வலயமொன்றான அநுராதபுர பிரதேசமானது வனங்கள் மற்றும் வன விலங்குகள் போன்ற இயற்கை வளங்களுடன் செழிப்புற்றுள்ளதுடன் பாரிய வாவிகள் மற்றும் நெல் வயல்களுடன்கூடிய மிகுந்த ஈர்ப்புடைய சுற்றாடலாக மாறியுள்ளது. நாட்டிற்கு கூடுதல் வௌிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கு உகந்த சுற்றுச் சூழலொன்றையும் உருவாக்குவதுடன், இவ்வளங்களின் நிலைபேறான பயன்பாட்டிற்கூடாக சுற்றாடல் சுற்றுலா கைத்தொழிலை அபிவிருத்தி செய்வதற்கான சாத்தியப்பாடு உள்ளது. அதற்கிணங்க, அநுராதபுர மாவட்டத்தில் நாச்சதூவ, தலாவ மற்றும் மத்திய நுவரகம் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள வனப் பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான 200 ஏக்கர் காணியொன்றில் உள்நாட்டு வன விலங்குகளை உள்ளடக்கி சுற்றாடல் பூங்காவொன்றைத் தாபிக்கும் பொருட்டு சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.