• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1981 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க மஹபொல உயர்கல்வி புலமைப் பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டத்தை திருத்துதல்
- மஹபொல உயர்கல்வி புலமைப் பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதியத்தின் நிருவாகம், முகாமைத்துவம் மற்றும் அதன் நியதிங்களை கட்டுப்படுத்தும் அந்நிதிய நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் ஓர் உறுப்பினராக உயர் நீதிமன்றத்தின் மாண்புமிகு பிரதம நீதியரசர் சேவையாற்றுகின்றார். நம்பிக்கை பொறுப்பாளர் சபையின் ஓர் உறுப்பினராக இருக்கும் மாண்புமிகு பிரதம நீதியரசர், கூறப்பட்ட நிதியம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கையொன்றின் வழக்கில் சுயாதீன தீர்மானமொன்றை எடுப்பதற்கு தடையாகவுள்ளமையினால் , கூறப்பட்ட நம்பிக்கை பொறுப்பாளர் சபையிலிருந்து பிரதம நீதியரசரை விடுவித்துக் கொள்தல் பொருத்தமானதென்று மாண்புமிகு பிரதம நீதியரசராலும் அதேபோன்று அரச தொழில்முயற்சிகள் பற்றிய குழுவினாலும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கிணங்க, கூறப்பட்ட நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கான உறுப்பினர்களின் நியமனத்தை பொருத்தமுடையதாக இயலுமைப்படுத்தி 1981 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க மஹபொல உயர்கல்வி புலமைப் பரிசில் நம்பிக்கை பொறுப்பு நிதிய சட்டத்தை திருத்தும் பொருட்டு உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.