• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-14 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய புலனாய்வுச் சட்டம்
- தேசிய பாதுகாப்பை பாதிக்கும் செயற்பாடுகளை முன்னுணர்ந்து, அவற்றைத் தடுப்பதற்கு பொருத்தமான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து அத்துடன் அது குறித்து பொருத்தமான சிபாரிசுகளை செய்வதன் மூலம் முக்கியமான பங்களிப்பொன்றை இலங்கையின் புலனாய்வு முகவராண்மைகள் ஆற்றுவதுடன் அத்தகைய முகவராண்மைகளினால் செய்யப்படும் முன்னுணர்வுகளின் அடிப்படையில் பயங்கரவாத மற்றும் ஏனைய அச்சுறுத்தல்கள் தடுக்கப்பட்டுள்ளன என்பதுடன் தேசிய நெருக்கடிகளின் போது அவற்றினால் வௌிப்படுத்தப்பட்ட தகவல்கள் மற்றும் செய்யப்பட்ட சிபாரிசுகள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் மிக முக்கியமானதாக மாறியுள்ளது.
புலனாய்வு நடவடிக்கைகள் தொடர்பான செயற்பாடுகளை ஒழுங்குறுத்துவதற்கும் புலனாய்வு முகவராண்மைகளை வலுப்படுத்துவதற்கும் மற்றும் அவர்களின் நடவடிக்கை செயற்பாடுகளுக்கு உதவுவதற்கும் தேவைப்படும் சட்ட ஏற்பாடுகள் போதியளவு இல்லாமை காரணமாக சில புலனாய்வு முகவராண்மைகளின் செயற்பாடுகள் மட்டுபடுத்தப்பட்டுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது.
ஆதலால், தேசிய பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கி புலனாய்வின் சகல துறைகளையும் ஒழுங்குறுத்தி வலுப்படுத்தும் சட்டமூலமொன்றை வரைவதற்கு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரும் உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலனோம்புகை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.