• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு இறைவரி (திருத்த) சட்டமூலம்
- அமைச்சரவையினால் ஏற்கனவ அங்கீகரிக்கப்பட்ட 'பொருளாதார புத்துயிரூட்டல் ஆரம்ப நிகழ்ச்சித்திட்டம்' என்பதன் கீழ் வரிக் கொள்கைப் பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்குரியதாக உரிய வரிச் சட்டங்கள் திருத்தப்பட வேண்டியுள்ளன. இதற்கிணங்க, வட்டி வருமானத்தை தேக்கிவைக்கும் வரியிலிருந்து விலக்களித்தல், உழைக்கும் போது செலுத்தும் வரி விகிதாசாரத்தை திருத்துதல் மற்றும் சேவை நன்மைகள் மீது உரியதாகும் வருமானவரி விகிதாரத்தை திருத்துதல், இறைவரி விலக்களித்தல் மற்றும் விகிதாசாரங்களை மாற்றுதல் என்பன சம்பந்தமான உத்தேச திருத்தங்களை உள்ளடக்கி உள்நாட்டு இறைவரி சட்டத்தை திருத்துவதற்கான சட்டமூலத்தை தயாரிக்குமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.