• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய வரி தொடர்பான பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துதல்
- அமைச்சரவையினால் ஏற்கனவ அங்கீகரிக்கப்பட்ட 'பொருளாதார புத்துயிரூட்டல் ஆரம்ப நிகழ்ச்சித்திட்டம்' என்பதன் கீழ் வரிக் கொள்கைப் பிரேரிப்புகளை நடைமுறைப்படுத்துவதற்குரியதாக உரிய வரிச் சட்டங்கள் திருத்தப்பட வேண்டியுள்ளன. இதற்கிணங்க, சட்டவரைநரினால் தயாரிக்கப்பட்ட தேசத்தை கட்டியெழுப்பும் வரி (திருத்த) சட்டமூலம், துறைமுக மற்றும் விமான நிலைய அபிவிருத்தி வரி (திருத்த) சட்டமூலம், பொருளாதார சேவை கட்டண (திருத்த) சட்டமூலம் மற்றும் பெறுமதிசேர்க்கப்பட்ட வரி (திருத்த) சட்டமூலம் ஆகிய சட்டமூலங்களை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர், இந்த சட்டமூலங்களை அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்குமாக நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.