• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆழ் கடலில் மணல் அகழ்வதன் மூலம் கல்கிஸ்சையிலிருந்து அங்குலான வரையிலும் களுத்துறை கலிடோ கரையோர பகுதியையும் மீள் நிரப்பல் கருத்திட்டம்
- கொள்ளுபிட்டியவுக்கும் மொரட்டுவைக்கும் இடையில் அமைந்துள்ள அங்குலான கரையோர பகுதியானது மிகக் கூடுதலான சனத்தொகையைக் கொண்ட கரையோரப் பிரதேசமாக இனங்காணப் பட்டுள்ளதோடு, இந்தப் பிரதேசம் கூடுதலாக மண்ணரிப்புக்கு ஆளாவதன் காரணமாக பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பு கல் அணைகள் இடப்பட்டுள்ளமையினால் கரையோரமானது இல்லாமற்போயுள்ளது. தற்போது களுத்துறை களுகங்கை முகத்துவாரத்திற்கு அருகாமையில் சுமார் 02 கிலோ மீற்றர் வரையிலான மணல் அணையானது முழுமையாக அரிப்புக்குள்ளாகி யுள்ளதோடு, பிரச்சித்திப் பெற்ற கலிடோ கரையோர பகுதியும் மிகக் கடுமையாக அரிப்புக்குள்ளாகியுள்ளது. ஆதலால், அங்குலான தொடக்கம் கல்கிஸ்சை வரையிலான 4 கிலோ மீற்றர்களும் களுத்துறை கலிடோ கரையோர பகுதியில் 2 கிலோ மீற்றர்களும் மீள் நிரப்பப்படுவதற்காக ஆழ் கடலிலிருந்து மணல் அகழ்ந்து கரையோரத்தை மீள் நிரப்பும் கருத்திட்டத்திட்டத்திற்கு ஏற்கனவே அமைச்சவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த கரையோர மீள் நிரப்பல் கருத்திட்டத்திற்குரிய ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s. Rohde Nielsen A/S நிறுவனத்திற்கு 4.40 மில்லியன் யூரோக்கள் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.