• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இந்திய கடன் வழியின் கீழ் இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய பேருந்துகளை கொள்வனவு செய்தல்
- இந்திய கடன் வழியின் கீழ் 15.03 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பயன்படுத்தி 50 - 54 ஆசனங்களைக் கொண்ட 400 பேருந்துகளையும் 32-35 ஆசனங்களைக் கொண்ட 100 பேருந்துகளையும் கொள்வனவு செய்வதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இலங்கை போக்குவரத்து சபையினால் மக்களுக்கு வினைத்திறன் மிக்கதும் வசதியானதுமான போக்குவரத்து சேவையினை வழங்குவதற்கு அதன் தேவைகளை மீள மதிப்பிட்டு, நெடுந்தூர பயணங்கள், நகர மற்றும் கிராமிய பிரதேசங்களின் பிரதான வீதிகள் அதேபோன்று கிராமிய பிரதேசங்களின் இடைப்பாதைகள் என்பவற்றுக்கு பயன்படுத்தவேண்டிய பேருந்து வகைகளும் தேவையான அளவும் இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்திய கடன் திட்டத்தின் கீழ் இதற்கு முன்னர் கொள்வனவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்ட பேருந்துகளுக்குப் பதிலாக 30-35 ஆசனங்களைக் கொண்ட 500 புதிய பேருந்துகளையும் 42-45 உயர் பின் ஆசனங்களைக் கொண்ட 100 புதிய பேருந்துகளையும் கொள்வனவு செய்வதற்கு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.