• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
முப்பது (30) மாத காலப்பகுதிக்குள் 100,000 அகன்ற கொங்கிறீட் சிலிப்பர் கிடைக் கட்டைகளை உற்பத்தி செய்து வழங்கும் பொருட்டிலான புதிய ஒப்பந்தத்தை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு பெற்றுக் கொள்வதற்கான பிரேரிப்பு
- இலங்கையில் புகையிரத சேவையின் ஆரம்பம் முதல் புகையிரத பாதைகளுக்கு பிரதானமாக மர சிலிப்பர் கிடைக் கட்டைகள் பயன்படுத்தப்பட்டிருந்தபோதிலும் கடும் மரப்பற்றாக்குறை காரணமாக முக்கியமாக புகையிரத பாதைகளின் பராமரிப்புக்குத் தேவையான சிலிப்பர் கிடைக் கட்டைகளின் கூடிய கேள்வியினை நிறைவு செய்வதற்கு அரசாங்க மரக் கூட்டுத்தாபனத்திற்கு முடியாமற்போயுள்ளது. ஆதலால், தற்போது புகையிரதப் பாதைகளின் பராமரிப்பின்போது மர சிலிப்பர் கிடைக் கட்டைகளின் பற்றாக்குறையினை தவிர்ப்பதற்கும் புகையிரத திணைக்களத்தில் தற்போது நடைமுறையிலுள்ள பல்வேறுபட்ட கருத்திட்டங்களுக்கான சிலிப்பர் கிடைக் கட்டைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் இந்த திணைக்களத்திற்கு கொங்கிறீட் சிலிப்பர் கிடைக் கட்டைகளை அதிகமாக பெற்றுக் கொள்ளவேண்டி நேர்ந்துள்ளது. இதற்கிணங்க, எதிர்வரும் முப்பது (30) மாத காலப்பகுதிக்குள் முகாமைத்துவ கட்டணம் அடங்கலாக சிலிப்பர் கிடைக் கட்டையொன்று 6,876/- ரூபா வீதம் 100,000 கொங்கிறீட் சிலிப்பர் கிடைக் கட்டைகளை வழங்கும் பொருட்டிலான ஒப்பந்தத்தை அரசாங்க பொறியியல் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கும் பொருட்டு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.