• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் வடமேல் மாகாணத்தில் சிவில் வேலை ஒப்பந்தங்கள் இரண்டினை வழங்குவதற்கு அங்கீகாரம் பெற்றுக் கொள்ளல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் ஒருங்கிணைந்த வீதி முதலீட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் குருநாகல் மாவட்டத்தின் கிராமிய வீதிகள் 99 கிலோ மீற்றர்களை புனரமைப்பதற்கும் / விருத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்குமான 03 பொதிகள் மற்றும் இதே மாவட்டத்தின் 104 கிலோ மீற்றர்களை புனரமைப்பதற்கும் / விருத்தி செய்வதற்கும் பராமரிப்பதற்குமான 05 பொதிகள் தொடர்பிலான ஒப்பந்தங்களை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு முறையே 2,165.26 மில்லியன் ரூபாவுக்கு M/s RR Construction (Pvt) Ltd., நிறுவனத்திற்கும் 2,296.13 மில்லியன் ரூபாவுக்கு M/s Finite Lanka (Pvt) Ltd., நிறுவனத்திற்கும் கையளிக்கும் பொருட்டு வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.