• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சோடியம் குளோரைட் நரம்பின் ஊடாக உட்செலுத்தும் கரைசல் BP 0.9% w/v அல்லது சோடியம் குளோரைட் ஊசி மருந்து USP 0.9% w/v 500ml புட்டிகள் 11,000,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
– நோயாளிகளின் குருதியின் அளவு குறையும் சந்தர்ப்பத்தில் குறையும் குருதியின் அளவினை மீள பேணுவதற்காக பயன்படுத்தப்படும் சோடியம் குளோரைட் நரம்பின் ஊடாக உட்செலுத்தும் கரைசல் BP 0.9% w/v அல்லது சோடியம் குளோரைட் ஊசி மருந்து USP 0.9% w/v 500ml புட்டிகள் 11,000,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வியை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு சீனாவின் M/s Sichuan Kelun Pharmaceutical Co. Ltd., நிறுவனத்திற்கு 2.92 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைக் கொண்ட மொத்த தொகைக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.