• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Enoxaparin Sodium தடுப்பூசி 4,000 IU 0.4 மில்லி லீற்றர் நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 500,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி
– இருதய நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்காக பயன்படுத்தப்படும் Enoxaparin Sodium தடுப்பூசி 4,000 IU 0.4 மில்லி லீற்றர் நிரப்பப்பட்ட சிரிஞ்சர்கள் 500,000 கொள்வனவு செய்வதற்கான கேள்வி சம்பந்தமாக சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள சிபாரிசுகளானவை கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையினால் பரிசீலனை செய்யப்பட்டு அமைச்சரவைக்கு இந்த கேள்வி தொடர்பில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் பற்றி சிபாரிசுகளை முன்வைத்துள்ளது. கொள்வனவு மேன்முறையீட்டுச் சபையின் இந்த சிபாரிசுகளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, உரிய கொள்வனவினை M/s ABC Pharma Services (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு 396.74 மில்லியன் ரூபாவைக் கொண்ட மொத்த தொகைக்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம் மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.