• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மோட்டார் வாகன (சைகைகள், அடையாளங்கள் மற்றும் வீதிக் குறியீடுகள்) ஒழுங்குவிதிகள் பிரசுரிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்
- மோட்டார் வாகன சட்டத்திலுள்ள ஏற்பாடுகளின் பிரகாரம் நெடுஞ்சாலைகளில் சைகைகள், அடையாளங்கள் மற்றும் வீதிக் குறியீடுகள் போன்றவற்றுக்கான ஒழுங்குவிதிகளை பிரகடனப்படுத்தும் பொருட்டு 2015 11 12 ஆம் திகதியிடப்பட்டதும் 1940/21 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானி அறிவித்தல் பிரசுரிக்கப்பட்டுள்ளது. ஆயினும் "நெடுந்தூர சேவை பேருந்துகளுக்கு வரையறுக்கப்பட்ட தரிப்பிடங்கள்" என்பதனை குறித்துக் காட்டுவதற்கு அடையாளமொன்று இதன் மூலம் அறிமுகப்படுத்தப்படவில்லை. இத்தகைய குறியீடொன்று இல்லாமையினால் பேருந்து சாரதிகளுக்கும் பயணிகளுக்கும் ஏற்படும் அசெளகரியங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு, "நெடுந்தூர சேவை பேருந்துகளுக்கு வரையறுக்கப்பட்ட தரிப்பிடங்கள்" என்பதனை பிரகடனப்படுத்தும் பொருட்டு புதிய அடையாளமொன்றை உள்வாங்கி 2019 06 18 ஆம் திகதியிடப்பட்டதும் 2128/9 ஆம் இலக்கத்தைக் கொண்டதுமான வர்த்தமானி அறிவித்தல் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிணங்க இந்த வர்த்தமானி அறிவித்தலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் பொருட்டு போக்குவரத்து சேவைகள் முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.