• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
"பல்பணி அபிவிருத்தி செயலணியொன்றைத்" தாபித்தல்
– குறைந்த வருமானம் பெறும் குடும்பங்ளிலுள்ள குறைந்த கல்வித் தகைமைகளுடன் கூடிய 100,000 இளைஞர்களுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்கும் விதத்தில் "பல்பணி அபிவிருத்தி செயலணியை' அரசாங்க திணைக்களமொன்றாகத் தாபிப்பதற்கு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பானது 2019 12 10 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கிணங்க இந்த திணைக்களத்தின் கீழ் 'அபிவிருத்தி பணி உதவியாளர் சேவை' என்னும் சேவையொன்றை உருவாக்குவதற்கும் இந்த சேவைக்கு அரசாங்க பாடசாலையொன்றில் 8 ஆம் தரம் சித்தியடைந்த 100,000 பேரை ஆட்சேர்ப்பு செய்வதற்குமாக மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.