• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நெல் விவசாயிகளுக்கு இலவசமாக பசளை வழங்குதல்
- 'சுபீட்சத்தின் நோக்கு' புதிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தின் மூலம் உள்நாட்டு நெல் விவசாயிகளை பலமிக்கவர்களாக மாற்றுவதற்கு பல்வேறுபட்ட அணுகுமுறைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதன்கீழ் தற்போது நடைமுறையிலுள்ள பசளை மானிய முறைக்கு பதிலாக நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு பயிர்ச்செய்கைக்குத் தேவையான இரசாயன மற்றும் சேதன பசளையினை இலவசமாக வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப் படுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, 2020 சிறுபோகத்தின் ஆரம்பத்திலிருந்து நெல் செய்கை பண்ணும் விவசாயிகளுக்கு உச்சமாக 02 ஹெக்டயார்கள் வரை யூரியா, Triple Super Phosphate மற்றும் Muriate of Potash ஆகிய பசளை வகைகளை சிபாரிசு செய்யப்பட்ட அளவில் வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் வேலைத்திட்டமொன்றை தயாரித்து நடைமுறைப்படுத்துவதற்காக மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.