• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'கமட்ட கெயக் - ரட்டட்ட ஹெட்டக்' - ஒவ்வொரு குடும்பத்திற்கும் வசதியான வீடொன்று
- 'நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு' கொள்கை பிரகடனத்தில் மூலம் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கையின் அனைத்து குடும்பங்களுக்கும் வசதியான வீடொன்றில் வசிப்பதற்கான இடவசதியினை ஏற்பாடு செய்வதன் மூலம் நிலைபேறுடைய அபிவிருத்தி குறியிலக்குகளை பூர்த்தி செய்யும் நோக்கத்தினை வெற்றிக் கொள்ளும் பொருட்டு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சினால் 'கமட்ட கெயக் - ரட்டட்ட ஹெட்டக்' என்னும் வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தை துரிதமாகவும் நிலையான அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டமொன்றாகவும் 2020 ஆம் ஆண்டில் ஆரம்பிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட மற்றும் பிரதேச செயலக பிரிவுகள் மட்டத்தில் அரசியல் தலைவர்களினதும் அரசாங்க உத்தியோகத்தர்களினதும் ஒருங்கிணைப்புடன் கிராமிய மட்ட அரசியல் தலைவர்களையும் அரசாங்க உத்தியோகத்தர்களையும் சிவில் அமைப்புகளையும் பொது மக்களையும் உள்ளடக்கிய குழுக்களின் ஊடாக 2020 சனவரி மாதத்திலிருந்து நாடு முழுவதும் இந்த நிகழ்ச்சித்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கிணங்க இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முதல் கட்டமாக சகல கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளினதும் முன்னுரிமை அடிப்படையில் தெரிவுசெய்யப்பட்ட வறுமையான குடும்பமொன்றுக்கு வீடொன்றினை நிர்மாணிப்பதற்கு அல்லது விருத்தி செய்வதற்கு 6 இலட்சம் ரூபா உதவியினை நிர்மாணிப்பின் முன்னேற்றத்தின் அடிப்படையில் தவணையாக வழங்கி 14,022 வீடுகளை நிர்மாணிப்பதற்கான நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்ளும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.