• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-08 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இந்தோனேஷியாவின் பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை
- ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இந்தோனேஷியாவின் பாதுகாப்பு பல்கலைக்கழகத்துக்கும் இடையில் கல்வி ஒத்துழைப்பினை மேம்படுத்துதல், நூலகங்களுக்கான பரஸ்பர அணுகுமுறைகள், கல்வி பதவியணி, ஆசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் அழைப்பின் பேரிலான விரிவுரையாளர்களின் சேவையினை நிறுவனங்களுக்கிடையில் பரிமாறிக் கொள்ளல், பரஸ்பர கல்விச் சுற்றுலாக்கல் மூலோபாய ஆராய்ச்சி கொடைகள் அல்லது புலமைப்பரிசில் வழங்குதல், பயிலும் ஆசிரியர்களினதும் ஆராய்ச்சியாளர்களினதும் பயிற்சிக்கான வசதிகளை வழங்குதல், வௌிப்படுத்தப்பட்ட இலக்கிய நூல்கள் மற்றும் ஆவணங்களை பரிமாறிக் கொள்ளல், செயலமர்வுகள், மாநாடுகள் உட்பட இரு தரப்பும் அக்கறை காட்டும் கண்காட்சிகளை ஒழுங்கு செய்தல், அவற்றுக்கான பரஸ்பர பங்களிப்பினை ஊக்குவித்தல் போன்ற விடயங்கள் சம்பந்தமாக ஒத்துழைப்புடன் செயலாற்றுவதற்கு இயலுமாகும் வகையில் புரிந்துணர்வு உடன்படிக்கையினை கைச்சாத்திடும் பொருட்டு மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரும் உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலனோம்புகை அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.