• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்கு வீதி இணைப்பு கருத்திட்டத்தின் கீழ் கிருலப்பனையிலிருந்து கொடகம வரையிலான வீதிப் பகுதியையும் பாமன்கடையிலிருந்து பொக்குனுவிட்ட வரையிலான வீதிப் பகுதியையும் புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான ஒப்பந்தத்தை வழங்குதல்
- ஆசிய அபிவிருத்தி வங்கியினால் நிதியளிக்கப்படும் தெற்கு வீதி இணைப்பு கருத்திட்டத்தின் கீழ் கிருலப்பனையிலிருந்து கொடகம வரையிலான வீதிப் பகுதியையும் பாமன்கடையிலிருந்து பொக்குனுவிட்ட வரையிலான வீதிப் பகுதியையும் புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்குமாக சருவதேச போட்டி அடிப்படையில் கேள்வி கோரப்பட்டுள்ளது. இதற்கிணங்க, அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு ஆகக்குறைந்த அனுசரணையான மதிப்பீட்டு விலையை முன்வைத்த கேள்விதாரரான MAGA Engineering (Pvt.) Ltd. நிறுவனத்திற்கு இலங்கை நாணயமான 4,215.15 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு உரிய ஒப்பந்தத்தை கையளிக்கும் பொருட்டு வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.