• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
அரசாங்க சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப் பாடநெறிகளை கற்பதற்காக மாணவர்களுக்கு வழங்கப்படும் 'வட்டியற்ற மாணவர் கடன்' திட்டத்தில் உள்வாங்கப்படுவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துதல்
- அரசாங்க சார்பற்ற உயர்கல்வி நிறுவனங்களில் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பட்டப் பாடநெறிகளை கற்பதற்காக 'வட்டியற்ற மாணவர் கடன்' திட்டமொன்று தற்போது நடைமுறையிலுள்ள போதிலும் இத்திட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்பட்டவாறு மாணவர்களை கவருவதற்கு இயலாமற் போயுள்ளது. முக்கியமாக இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தற்போது தெரிவுசெய்யப்பட்டுள்ள பாடநெறிகளுக்கு தொழிற்சந்தையில் போதுமான கேள்வி இல்லாமை மற்றும் இந்த பட்டப் பாடநெறிகளின் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திக்கு போதுமான பங்களிப்பு வழங்காமை காரணமாக இந்த கடன் திட்டமுறையினை மிகப் பயனுள்ள வகையில் மீண்டும் திட்டமிடப்படவேண்டியுள்ளது. இதற்கிணங்க "சுபீட்சத்தின் நோக்கு" புதிய ஐந்து (05) வருடக் கால அபிவிருத்தி திறமுறை கொள்கைக்கு அமைவாக தகவல் தொழிநுட்ப மற்றும் தொழிநுட்ப துறைகளில் நிலவும் தொழில்வாய்ப்புகளுக்கு தொழிநுட்ப அறிவுடைய 10,000 பட்டதாரிகளை உருவாக்குவதற்கு இயலுமாகும் வகையில் உரிய வட்டியற்ற மாணவர் கடன் திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி நடைமுறைப்படுத்தும் பொருட்டு உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.