• Increase font size
  • Default font size
  • Decrease font size

2020-01-02 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குடிநீரின் தரத்தை பரிசோதித்தல் மற்றும் மேற்பார்வை செய்யும் நிகழ்ச்சித்திட்டம்
- 51 சதவீதமாகவுள்ள தற்போதய குழாய்நீர் வழங்கலின் 11 சதவீதமானது சமூகம் சார்ந்த அமைப்புகளின் ஊடாக முகாமிக்கப்படும் நீர்வழங்கல் திட்டங்கள், பாதுகாப்பான அகழப்பட்ட கிணறுகள், குழாய்க்கிணறுகள் என்பவற்றின் மூலம் வழங்கப்படுகின்றதோடு, இந்த மூலவளங்களின் ஊடாக வழங்கப்படும் நீரின் தரத்தை பரிசோதிப்பதற்கு நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சினால் நிகழ்ச்சித்திட்டமொன்று திட்டமிடப்பட்டுள்ளது. தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்புச் சபை, தேசிய சமூக நீர் வழங்கல் திணைக்களம், நீர்வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டு மேம்பாட்டுக் கருத்திட்டம் சீன - இலங்கை ஆராய்ச்சி கருத்திட்டம் என்பன இதன் பிரதான தரப்பாகும்.

இதற்கிணங்க, சமூகம் சார்ந்த அமைப்புகளின் ஊடாக முகாமிக்கப்படும் நீர்வழங்கல் திட்டங்கள், பாதுகாப்பான அகழப்பட்ட கிணறுகள், குழாய்க்கிணறுகள் என்பவற்றின் மூலம் வழங்கப்படுகின்றதோடு, இந்த மூலவளங்களின் ஊடாக வழங்கப்படும் நீரின் தரத்தை பரிசோதிப்பதற்கும் மேற்பார்வை செய்வதற்குமான நிகழ்ச்சித்திட்டமானது உலக வங்கியினால் நிதியுதவி வழங்கப்படும் நீர்வழங்கல் மற்றும் துப்பரவேற்பாட்டு மேம்பாட்டுக் கருத்திட்டத்தின் ஊடாக தழுவப்படும் ஏழு மாவட்டங்களில் ஆரம்பிப்பதற்கும் அதன் பின்னர் இதனை ஏனைய மாவட்டங்களில் விரிவுபடுத்துவதற்குமாக நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.