• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
Millennium Challenge Corporation நிறுவனத்தின் Compact உடன்படிக்கையை மீளாய்வு செய்தல்
– இனங்காணப்பட்ட சில துறைகளின் நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்காக Millennium Challenge Corporation நிறுவனத்தினால் வழங்கப்படும் பிரதான கொடையினை பெற்றுக் கொள்ளும் பொருட்டு ஐக்கிய அமெரிக்காவின் Millennium Challenge Corporation நிறுவனத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான Compact உடன்படிக்கையிலும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் உடன்படிக்கையிலும் கைச்சாத்திடுவதற்கு 2019‑10‑29 ஆம் திகதியன்று நடாத்தப்பட்ட அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், இந்த கருத்திட்டம் சம்பந்தமாக பல்வேறுபட்ட தரப்பினர்களினால் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்ளை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு Millennium Challenge Corporation நிறுவனத்தின் கருத்திட்டம் தொடர்பில் விரிவாக ஆராய்ந்து அரசாங்கத்திற்கு சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் பொருட்டு பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் இந்தக் குழு அதன் சிபாரிசுகளை சமர்ப்பிக்கும் வரை 2019‑10‑29 ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுப்பதனை இடைநிறுத்துவதற்குமாக மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* பேராசிரியர் (திரு) லலிதசிறி குணருவன் - (தலைவர்);
* திரு.டீ.எஸ்.ஜயவீர, முன்னாள் போக்குவரத்து அமைச்சின் செயலாளர்;
* சனாதிபதி சட்டத்தரணி திரு.நிஹால் ஜயவர்தன;
* திரு.நாலக ஜயவீர