• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தியின் பொருட்டு அமைச்சுகளுக்கு இடையிலான செயலணியொன்றைத் தாபித்தல்
- பொருளாதார அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பினை நல்கும் உற்பத்தி கைத்தொழில் துறையில் கொள்கை தீர்மானங்களை எடுக்கும் போது நிகழும் தாமதங்கள் உட்பட பிரச்சினை மிக்க நிலைமைகளை குறைத்துக் கொள்ளும் நோக்கில் அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமையில் கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சர் அடங்கலாக ஏனைய உரிய அமைச்சர்களினதும் அமைச்சுக்களின் செயலாளர்களினதும் உறுப்பினர்களினதும் பங்குப்பற்றுதலுடன் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தியின் பொருட்டு அமைச்சுகளுக்கு இடையிலான செயலணியொன்றைத் தாபிப்பதற்காக கைத்தொழில் மற்றும் வழங்கல் முகாமைத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.