• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய கொள்கைகள் மற்றும் திட்டமிடல் பணியகமொன்றைத் தாபித்தல்
- தேசிய கொள்கைகள் மற்றும் திட்டமிடல், அரசாங்க முதலீடுகளை ஒதுக்குதல், தேசிய அபிவிருத்தியினை திட்டமிடுதல், பெறுகை செயற்பாடுகள், கருத்திட்ட ஆய்வு மற்றும் முகாமைத்துவம் போன்ற துறைகளுக்குரிய பணிகளை வௌிப்படைத்தன்மை வாய்ந்ததாகவும் அரசாங்கத்தின் திறமுறைக்கு அமைவாகவும் மேற்கொண்டு பொருளாதார குறியிலக்குகளை அடைவதற்குத் தேவையான பொருளாதார கொள்கைகளை செயற்படுத்துவதற்காக தேசிய கொள்கைகள் மற்றும் திட்டமிடல் பணியகமொன்றைத் தாபிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.