• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020 ஆம் ஆண்டு சார்பில் முப்படையினருக்கும் தேவையான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்கான கேள்வி
– 2020 ஆம் ஆண்டு சார்பில் இலங்கை தரைப்படைக்கு, இலங்கை கடற்படைக்கு, இலங்கை விமானப் படைக்கு தேவையான உணவுப் பொருட்களை கொள்வனவு செய்வதற்குரியதான அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் செய்யப்பட்டுள்ள சிபாரிசுக்கு அமைவாக இந்த கொள்வனவுகளை கையளிப்பதற்காக மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருமானவரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.