• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாரம்பரிய ஓடுகள், செங்கற்கள் மற்றும் மட்பாண்ட கைத்தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு கைத்தொழிலாளர்களுக்கு களிமண் பெற்றுக் கொள்வதற்கு நிவாரணம் வழங்குதல்
– 2009 ஆம் ஆண்டின் 66 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 1992 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க சுரங்கங்கள், கனிப்பொருட்கள் சட்டத்தின் பிரகாரம் ஏதேனும் களிமண் அகழ்வினை மேற்கொள்ளும் ஆள் எவரும் அல்லது நிறுவனமொன்று அதன் பொருட்டு அகழ்வு உரிமப்பத்திரமொன்று பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதோடு இந்த மூலப்பொருளை உரிய கைத்தொழிலை நடாத்திச் செல்லும் இடம்வரை கொண்டு செல்வதற்கும் உரிமப்பத்திரமொன்றினை பெற்றுக் கொள்தல் வேண்டும். ஆயினும், இந்த உரிமப்பத்திர நடைமுறையில் நிலவும் உட்சிக்கல் நிலமை காரணமாக சிறிய அளவிலான மட்பாண்ட கைத்தொழிலாளர்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகின்றமைப் பற்றி கவனத்திற்கு எடுத்துக் கொண்டு மணல், மண் மற்றும் களிமண் கொண்டு செல்வதற்கான உரிமப்பத்திரம் பெற்றுக் கொள்ளும் தேவையினை தளர்த்துவதற்கு ஏற்கனவே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஓடுகள், செங்கற்கள் மற்றும் மட்பாண்ட கைத்தொழிலில் ஈடுபடும் கைத்தொழிலாளர்கள் அவர்களுடைய உற்பத்தி செயற்பாடுகளை நிலையான தன்மையில் நடாத்திச் செல்வதற்கு இயலுமாகும் வகையில் மூலப்பொருட்களை பெற்றுக் கொள்ளும் போது நடைமுறையிலுள்ள உட்சிக்கல் நிலைமை வாய்ந்த உரிமப்பத்திர செயற்பாட்டினை மேலும் தளர்த்தி வினைத்திறன்மிக்கதும் இலகுவானதுமான முறையொன்றினை அறிமுகப்படுத்தும் பொருட்டும் ஆற்று கரைகள் போன்ற சுற்றாடல் கூர் உணர்வுமிக்க பிரதேசங்களுக்கு இதன் மூலம் பாதிப்பு ஏற்படுத்தாதென உறுதிப்படுத்தும் பொருட்டும் தேவையான ஏற்பாடுகளை செய்வதற்காக 1992 ஆம் ஆண்டின் 33 ஆம் இலக்க சுரங்கங்கள், கனிப்பொருட்கள் சட்டத்தின் 28 ஆம் 30 ஆம் பிரிவுகளை பொருத்தமானவாறு திருத்துவதற்கு சுற்றாடல் மற்றும் வனசீவராசிகள் வளங்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.