• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புதிய கல்வி மறுசீரமைப்பு முன்மொழிவுகளை அமுல்படுத்துவதற்காக கல்வி அமைச்சில் செயலணியொன்றைத் தாபித்த
– அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைவாக கல்வி மறுசீரமைப்பு முன்மொழிவுகளை திட்டமிட்டும் வௌிப்படைத் தன்மையாகவும் நடைமுறைப்படுத்துவதற்கு தொழிநுட்ப மற்றும் கொள்கை வழிகாட்டல்களை வழங்கும் பொருட்டு 'கல்வி தொடர்பிலான செயலணியொன்றை' தாபிப்பது அத்தியாவசியமானதென இனங்காணப்பட்டுள்ளது. இதற்கிணங்க கல்வி மறுசீரமைப்பு முன்மொழிவு நிகழ்ச்சித்திட்டங்களையும் திறமுறைகளையும் இனங்காணுதல், நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான உதவிகளை வழங்குதல், உரிய நிறுவனங்களுக்கு வழிகாட்டல்களை வழங்குதல், ஒழுங்குறுத்தல் மற்றும் பின்னூட்டல்களை வழங்குதல் என்பன பொருட்டு கல்வி செயலணியொன்றைத் தாபிப்பதற்கும் உரிய துறை தொடர்பில் நிபுணத்துவம் கொண்ட நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டும் கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.