• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கமத்தொழில் அமைச்சை மீண்டும் "கொவிஜன மந்திரய" கட்டடத்தில் தாபித்தல்
- கமத்தொழில் அமைச்சு தாபிக்கப்பட்டிருந்த பத்தரமுல்லை ரஜமல்வத்த ஒழுங்கையில் அமைந்துள்ள "கொவிஜன மந்திரய" என்னும் அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டடமானது பாராளுமன்ற குழு முறைமையினை தாபிக்கும் நோக்கில் அமைச்சரவையின் அங்கீகாரத்தின் மீது இலங்கை பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டது. ஆயினும் இந்த கட்டடம் இதுவரை எதிர்பார்க்கப்பட்ட நோக்கங்களுக்காக முழுமையாக பயன்படுத்த வில்லை. அதேபோன்று கமத்தொழில் அமைச்சினை வாடகை அடிப்படையில் வேறு கட்டடம் ஒன்றில் தாபிக்க நேர்ந்தமையினால் கட்டடத்திற்கு வாடகையாக மாதாந்தம் சுமார் 21 மில்லியன் ரூபா செலவு செய்வதற்கு நேரிட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த கட்டடத்திலுள்ள வசதிகள் போதுமானதாக இல்லாமையினால் இங்கு சேவை புரியும் உத்தியோகத்தர்களுக்கும் அதேபோன்று சேவை பெறுநர்களுக்கும் பல்வேறுபட்ட இடையூறுகளுக்கு ஆளாக நேரிட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு கமத்தொழில் அமைச்சையும் அதன் கீழுள்ள ஏனைய நிறுவனங்களையும் மீண்டும் "கொவிஜன மந்திரயவில்" தாபிக்கும் பொருட்டு மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.