• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2020 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள 72 ஆவது தேசிய தின விழா
- 2020 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று நடாத்தப்படவுள்ள 72 ஆவது தேசிய தின விழாவிற்குரிய நிகழ்ச்சித்திட்டங்களை தயாரித்து தேவையான நடவடிக்கைகளை ஏற்பாடு செய்வதற்காக மாண்புமிகு பிரதம அமைச்சரின் தலைமையில் அமைச்சர்கள் குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு பொது நிருவாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதேபோன்று 72 ஆவது தேசிய தின விழாவினை கொழும்பு 07 இல் அமைந்துள்ள சுதந்திர சதுக்கத்தில் நடாத்துவதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.