• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மொரட்டுவை பல்கலைக்கழகத்துடன் இணைந்த தொழினுட்ப நிறுவனத்தின் கீழ் 1000 தகவல் தொழினுட்ப சான்றிதழ் / டிப்ளோமா பாடநெறிகளை அறிமுகப்படுத்துதல்
- தற்போது உள்நாட்டிலும் சருவதேச ரீதியிலும் உயர் கேள்வி நிலவும் மென்பொருட்களை உற்பத்தி செய்தல் மற்றும் இணையத்தினை அடிப்படையாகக் கொண்ட தொழில்வாய்ப்புகளுக்கான தகவல் தொழினுட்ப துறைசார்ந்த தொழிற் சந்தையினை இலக்காகக் கொண்டு தொழினுட்ப விடய திட்டத்தையும் ஏனைய விடய திட்டங்களையும் கற்ற அல்லது உயர்தரம் சித்தியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் / டிப்ளோமா / உயர் டிப்ளோமா பாடநெறிகளுக்கான பயிற்சி வாய்ப்புகளை வழங்கும் துரித நிகழ்ச்சித்திட்டமொன்றினை நடைமுறைப்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்தை 2020 ஆம் ஆண்டில் 1,000 பயிற்சி வாய்ப்புகளுடன் ஆரம்பித்து 2022 ஆம் ஆண்டளவில் 3,000 பயிற்சி வாய்ப்புகள் வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கிணங்க, மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் துணை நிறுவனமான தியகம தொழினுட்ப நிறுவனத்தினை முதன்மையாகக் கொண்டு இந்த பாடநெறிகளை நடாத்துவதற்கும் பாடநெறிகளை திட்டமிடுவதற்காக அரசாங்க மற்றும் தனியார் துறையில் சேவைபுரியும் தகவல் தொழினுட்ப துறையைச் சேர்ந்த நிபுணர்களை உள்ளடக்கிய குழுவொன்றின் பங்களிப்பினைப் பெற்றுக் கொள்வதற்குமாக உயர் கல்வி, தொழினுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.