• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நிதி நகர கருத்திட்டத்தின் தற்போதைய விடய நோக்கெல்லையை மீளாய்வு செய்தல்
- இலங்கை துறைமுக அதிகாரசபையும் சீன முதலீட்டு நிறுவனமான CHEC Port City Colombo (Pvt.) Ltd., நிறுவனமும் இணைந்து தனியார் துறை முதலீடொன்றாக 'கொழும்பு துறைமுக நகர அபிவிருத்திக் கருத்திட்டமானது' 2014 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது. 2015‑01‑08 ஆம் திகதியன்றின் பின்னர் இந்த கருத்திட்டத்தின் ஆரம்ப விடயநோக்கெல்லையை மாற்றி 'நிதி நகர கருத்திட்டம்' ஒன்றாக உரிய கருத்திட்டமானது நடைமுறைப்படுத்தப்பட்டது. தற்போது வௌிவாரி ஆலோசகர்களின் ஒத்துழைப்புடனும் சட்டவரைநரின் வழிநடத்துதலின் மீதும் 'கொழும்பு நிதி நகரம்' என்னும் பெயரில் விசேட பொருளாதார வலயமொன்றைத் தாபிப்பதற்கு வரைவு சட்டமூலமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கிணங்க, தற்போதைய அரசியல், சமூக மற்றும் சுற்றாடல் பின்னணியில் இந்தக் கருத்திட்டத்தின் திருத்தப்பட்ட விடயநோக்கெல்லையையும் இவ்வாறு விடயநோக்கெல்லை திருத்தப்படுவதற்காக பின்பற்றப்பட்ட நடவடிக்கை முறையையும் மீளாய்வு செய்யும் தேவை எழுந்துள்ளதோடு, இதன் பொருட்டு உரிய விடயத்துறைசார்ந்த நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.