• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பல்பணி அபிவிருத்தி செயலணியொன்றைத் தாபித்தல்
- அரச மற்றும் அரச துணை நிறுவனங்களில் பயிற்றப்படாத தொழில்வாய்ப்புகள் பாரிய அளவில் உள்ளன எனவும் சமூகத்தில் குறைந்த வருமானம் பெறும் குழுக்களின்பால் கவனம் செலுத்தாது அரசியல் மற்றும் பிற சலுகைகளின் மீது அத்தகைய தொழில்வாய்ப்புகளுக்கு ஆட்கள் ஆட்சேர்ப்புச் செய்யப்படுகின்றார்கள் எனவும் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த விடயங்களை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு குறைந்த வருமானம் பெரும் குடும்பங்களில் கல்வித் தகைமைகள் குறைவாகவுள்ள 100,000 இளைஞர்களுக்கு தொழில்வாய்ப்புகளை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் பல்பணி அபிவிருத்தி செயலணியொன்றை அரச திணைக்களமொன்றாகத் தாபிப்பதற்கு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

இந்த செயலணிக்கான ஆட்சேர்ப்புகள் வௌிப்படைத் தன்மையுடன் மாவட்ட ரீதியில் மேற்கொள்வதற்கும் 2020 சனவரி மாதம் 15 ஆம் திகதியிலிருந்து இந்த திணைக்களத்தின் செயற்பாட்டு நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதோடு, செலவுகளை அறவிட்டுக் கொள்ளும் அடிப்படையில் இந்த செயலணியின் சேவைகளை அரசு மற்றும் அரச துணை நிறுவனங்களுக்கும் தனியார் துறைக்கும் பெற்றுக் கொள்ள இயலுமெனவும் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.