• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவை நியமித்தல்
- வாழ்க்கைச் செலவுக்குரிய விடயங்கள் சம்பந்தமாக அமைச்சரவைக்கு சிபாரிசுகளை சமர்ப்பிப்பதற்காக அதிமேதகைய சனாதிபதி அவர்களின் தலைமையில் பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட வாழ்க்கைச் செலவு பற்றிய அமைச்சரவை உபகுழுவை நியமிக்கும் பொருட்டு அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* மாணப்புமிகு பிரதம அமைச்சரும் நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரும்;

* மகாவலி, கமத்தொழில், நீர்ப்பாசனம் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சரும் உள்நாட்டு வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் நலனோம்புகை அமைச்சரும்;

* கடற்றொழில் மற்றும் நீரக வளமூலங்கள் அமைச்சர்; அத்துடன்

* பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி கமத்தொழில் அமைச்சர்.

அதேபோன்று, இந்த உபகுழுவுக்கு ஒத்தாசை வழங்கும் பொருட்டு 06 இராஜாங்க அமைச்சர்களையும் 12 உத்தியோகத்தர்களையும் கொண்ட குழுவொன்றையும் நியமிப்பதற்கும்கூடத் தீர்மானிக்கப்பட்டது.