• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2018 / 2019 பெரும்போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்பினை அரிசியாக்கி லங்கா சதொச விற்பனை வலையமைப்பின் ஊடாக சந்தைக்கு வழங்குதல்
- 2018 / 2019 பெரும்போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் கொள்வனவு செய்யப்பட்ட நெல் கையிருப்பிலிருந்து ஒரு பகுதி கடந்த காலத்தில் தனியார்துறையைச் சேர்ந்த சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகள் ஊடாக அரிசியாக்கி சந்தைக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது. ஆயினும், இந்த நாட்களில் சந்தையில் அரசியின் விலை அதிகரித்து செல்லும் போக்கு நிலவுகின்றமையினால், மேற்குறிப்பிட்டவாறு கொள்வனவு செய்யப்பட்ட கையிலிருப்பில் மீதியாக தற்போது நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சியங்களிலுள்ள சுமார் 42,000 மெற்றிக்தொன்னை அரசியாக்கி இதனை லங்கா சதொச விற்பனை வலையமைப்பின் ஊடாக வழங்குவதன் மூலம் நுகர்வோருக்கு சலுகை வழங்கும் பொருட்டு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றி நிதி, பொருளாதாரம் மற்றும் கொள்கை அபிவிருத்தி அமைச்சரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.

அதேபோன்று எதிர்வரும் 2-3 மாத காலப்பகுதிக்குள் பற்றாக்குறையின்றி அரிசியினை சந்தைக்கு வழங்குவதற்கும் அரசியின் உச்ச சில்லறை விலையினை 98/- ரூபாவாக பேணுவதற்கும் பிரதான அரிசி ஆலை உரிமையாளர்களினால் வழங்கியுள்ள உடன்பாட்டினை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு அரசி கிலோ ஒன்றின் உச்ச சில்லறை விலையினை 98/ ரூபாவாக நிர்ணயிப்பதற்கும் அமைச்சரவையினால் தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், விழா காலத்தில் விசேடமாக பெருந்தோட்டப் பிரதேசங்களிலும் நகர பிரதேசங்களிலும் வசிக்கும் பொதுமக்களுக்குத் தேவையான கோதுமை மா மற்றும் அது சார்ந்த உற்பத்திகளை குறைந்த விலையில் பெற்றுக் கொள்வதற்கு இயலுமாகும் வகையில் பெரும்போக நெல் அறுவடை கிடைக்கும்வரை கோதுமை மா இறக்குமதிக்குத் தேவையான நடவடிக்கை எடுப்பதற்கும்கூட அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.