• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
'கல்விச் சேவையினை' திணைக்கள சேவையொன்றாக தாபித்தல்
- தொழில்சார் பிரச்சினைகளை துரிதமாக தீர்த்தல், சேவை மதிப்பீடுகளை முறையாகவும் வௌிப்படைத் தன்மையாகவும் நிறைவேற்றுதல், தொழில்சார் தன்மையை மேம்படுத்துதல், சேவையின் திருப்திகரமான தன்மையை அதிகரித்தல் என்பன மூலம் சிறந்த வினைத்திறன் மிக்க சேவையொன்றினை வழங்குவதற்கு இயலுமாகும் வகையில் ஆசிரியர்கள், அதிபர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரிய கல்வியியலாளர்கள் மற்றும் கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் சார்பில் திணைக்கள சேவையொன்றைத் தாபிப்பது பொருத்தமானதென இனங்காணப்பட்டுள்ளது. இது சம்பந்தமான விடயங்களை ஆராய்ந்து பிரேரிப்புகளை தயாரிப்பதற்காக உரிய துறைசார்ந்த நிபுணர்களையும் கல்விமான்களையும் கொண்ட குழுவொன்றை நியமிக்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.