• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-12-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
துப்பரவேற்பாடு மற்றும் சுகாதாரம் தொடர்பிலான பிராந்திய துரித செயற்பாட்டு கற்கை பயிற்சிபட்டறை
- - தெற்காசிய பிராந்திய நாடுகளினால் துப்பரவேற்பாடு தொடர்பில் அடைந்துள்ள முன்னேற்றம் பற்றி ஒவ்வொரு நாட்டினதும் நடைமுறை ரீதியிலான அனுபவங்களை அறிந்துகொள்ளல், அறிந்தவற்றை பகிர்ந்துகொள்ளல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் உட்பட நடைமுறைசார்ந்த வழிகளை இனங்காணல் என்பவற்றை நோக்காகக் கொண்ட துப்பரவேற்பாடு பற்றிய தெற்காசிய மாநாடு தொடர்பில் (SACOSAN) துப்பரவேற்பாட்டிற்கான பிராந்திய நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்படும் "துப்பரவேற்பாடு மற்றும் சுகாதாரம் தொடர்பிலான பிராந்திய துரித செயற்பாட்டு கற்கை" என்னும் பயிற்சிப்பட்டறை உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், இலங்கையில் உரிய துறைசார்ந்த தொழில்சார்பாளர்கள், இலங்கையின் அரசாங்க துறைசார்ந்த தொடர்புடைய உத்தியோகத்தர்கள் மற்றும் உள்நாட்டு வௌிநாட்டு அரசசார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர்களின் பங்களிப்புடன் 2019 திசெம்பர் மாதம் 09 ஆம் திகதியிலிருந்து 11 ஆம் திகதி வரை இலங்கையில் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை பற்றி பிரதம அமைச்சரும் நகர அபிவிருத்தி, நீர்வழங்கல் மற்றும் வீடமைப்பு வசதிகள் அமைச்சருமானவரினால் அமைச்சரவைக்கு அறிவிக்கப்பட்டது.