• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மகுருஓயாவத்த புதிய தேசிய பாடசாலை நிர்மாணிப்பின் II ஆம் கட்டத்திற்கான ஒப்பந்தம்
- சகல பிள்ளைகளுக்கும் சமமானதும் நியாயமானதுமான தரம் மிக்க கல்வியினை வழங்கும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் 'அண்மைய பாடசாலை, சிறந்த பாடசாலை' என்னும் கருத்திட்டத்தின் கீழ் குருநாகல் மற்றும் அதற்கு அண்மித்த பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்களின் தரம்மிக்க கல்வியினை உறுதி செய்வதற்காக கருநாகல், மகுருஓயாவத்த பிரதேசத்தில் ஐந்து ஏக்கர் காணியில் 800 மில்லியன் ரூபா கொண்ட முதலீட்டில் விஸ்வோதா புதிய தேசிய பாடசாலை நிர்மாணிப்பின் II ஆம் கட்டத்திற்கான ஒப்பந்தத்தை வழங்கும் பொருட்டு கல்வி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.