• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
கணனி அறிவு தொடர்பிலான தேவையைப் பூர்த்தி செய்துள்ள கிராம உத்தியோகத்தர்களுக்கு பயிற்சி செலவுகளை மீளளித்தல்
- நாட்டிலுள்ள கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களைத் தழுவி அறிமுகப்படுத்தப்படவுள்ள மின்னணு கிராம உத்தியோகத்தர் தரவு முறைமையின் கீழ் கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களுக்கு வருகை தரும் சேவை நாடுநர்களுக்கு கணனி ஊடாக பல்வேறுபட்ட சேவைகளை வழங்குவதற்கான பொறுப்பானது கிராம உத்தியோகத்தர்களுக்கு கையளிக்கப்படும். கிராம உத்தியோகத்தர் சேவையின் ஆட்சேர்ப்புத் திட்டத்திற்கு அமைவாகவும் கிராம உத்தியோகத்தர்கள் கணனி அறிவு தொடர்பிலான பயிற்சித் தேவையினைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும். இதற்கிணங்க, III ஆம் தரத்திற்கு நியமிக்கப்படும் கிராம உத்தியோகத்தர்களில் நியமிக்கப்பட்ட திகதியிலிருந்து மூன்று (03) வருட காலத்திற்குள் கணனி அறிவு தொடர்பிலான தேவையினை பூர்த்தி செய்யும் உத்தியோகத்தர்களுக்கு அதன் பொருட்டு உறப்பட்ட பயிற்சி செலவுகளை மீளளிக்கும் வகையில் 7,000/- ரூபாவைக் கொண்ட கொடுப்பனவொன்றை வழங்கும் பொருட்டு உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.