• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காலநிலை தாக்கங்களை தணிக்கும் கருத்திட்டத்தின் கீழ் உத்தேசிக்கப்பட்டுள்ள அனர்த்த ஆபத்து நிலையை குறைக்கக் கூடிய அவதானிப்பு, எதிர்வுகூறல் மற்றும் தொடர்பாடல் கேந்திர நிலையங்களின் ஒருங்கிணைந்த கட்டடக்கலை மதியுரைச் சேவை
- காலநிலை தாக்கங்களை தணிக்கும் கருத்திட்டத்தின் கீழ் வளிமண்டலவியல் திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம் என்பன சார்பில் உத்தேசிக்கப்பட்டுள்ள அனர்த்த ஆபத்து நிலையை குறைக்கக் கூடிய அவதானிப்பு, எதிர்வுகூறல் மற்றும் தொடர்பாடல் கேந்திர நிலையங்களின் ஒருங்கிணைந்த கட்டடக்கலை மதியுரைச் சேவைக்கான ஒப்பந்தத்தை 63.43 மில்லியன் ரூபாவைக் கொண்ட தொகைக்கு M/s. Desin Group Five International (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு வழங்கும் பொருட்டு கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூல அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.