• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் 900 மெகாவொட் சார்பில் நீண்டகால நிலக்கரி விநியோக கேள்வியை வழங்குதல்
- நுரைச்சோலை லக்விஜய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்திற்கு 2019 நவெம்பர் மாதத்திலிருந்து 2021 ஏப்ரல் மாதம் வரை மின் உற்பத்திக்குத் தேவையான நிலக்கரி அளவான 2.25 மில்லியன் மெற்றிக் தொன் அதாவது அளவில் 50 சதவீதமான அளவினை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு மெற்றிக் தொன் ஒன்று 60.71 ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு சிங்கப்பூரின் M/s.Swiss Singapore Overseas Enterprises Pte. Ltd., கம்பனிக்கு வழங்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.