• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புத்தளம், லக்விஜய மின் நிலையத்தின் பராமரிப்பு சார்பிலான சேவைகளைப் பெற்றுக் கொள்தல்
- புத்தளம், லக்விஜய மின் நிலையத்தின் 1 ஆம் அலகின் 'B' மட்ட பராமரிப்பு சார்பில் நிபுணத்துவ மனிதவள சேவைகளைப் பெற்றுக் கொள்ளும் ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு China Machinery Engineering Corporation நிறுவனத்திற்கு 3.84 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட தொகைக்கு வழங்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.