• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய செலுத்துகை மற்றும் விநியோக வலையமைப்பு அபிவிருத்தி மற்றும் வினைத்திறன் மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் தெஹிவளை கல்கிஸ்ஸை மற்றும் பத்தரமுல்லை பிரதேசங்களில் ஆரம்ப உப நிலைய, விநியோக உபநிலைய மற்றும் கேபல் நிர்மாண ஒப்பந்தம்
- தேசிய செலுத்துகை மற்றும் விநியோக வலையமைப்பு அபிவிருத்தி மற்றும் வினைத்திறன் மேம்படுத்துதல் கருத்திட்டத்தின் பொதி 4 லொட் A என்னும் ஆக்கக்கூறின் கீழ் தெஹிவளை கல்கிஸ்ஸை மற்றும் பத்தரமுல்லை பிரதேசங்களில் ஆரம்ப உப நிலைய, விநியோக உபநிலைய மற்றும் கேபல் நிர்மாண ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு இந்தியாவின் M/s. Siemens Limited நிறுவனத்தினால் இலங்கையின் M/s. DIMO Private Limited நிறுவனத்துடன் செய்துகொண்ட கூட்டு தொழில்முயற்சிக்கு 4,594.43 மில்லியன் ரூபாவுக்கு சமமான தொகைக்கு வழங்கும் பொருட்டு மின்வலு, வலுசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.