• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
எல்பிட்டிய மற்றும் பலபிட்டிய ஆதார வைத்தியசாலைகளை அபிவிருத்தி செய்தல்
- 6,186 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் போதுமான உட்கட்டமைப்பு வசதிகளுடன் தீவிர சிகிச்சை பிரிவு, சத்திரசிகிச்சைக்கூடம், அவசர விபத்து மற்றும் சிகிச்சை பிரிவு, ஊடுகதிர்பிடிப்பு பிரிவு, ஆய்வுக்கூடம் என்பவற்றை தாபிக்கும் பொருட்டு 09 மாடிகளைக் கொண்ட காவறைத் தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கும் 6,228 மில்லியன் ரூபா முதலீட்டின் கீழ் பலபிட்டிய ஆதார வைத்தியசாலையில் வௌி நோயாளர் பிரிவு, விபத்து மற்றும் அவசர சேவை பிரிவு, காவறைத்தொகுதிகள், சத்திரசிகிச்சைக்கூடம், ஆய்வுக்கூடம் மற்றும் உதவிச் சேவைகள் என்பவற்றை தாபிக்கும் பொருட்டு 10 மாடிகளைக் கொண்ட கட்டடமொன்றை நிர்மாணிப்பதற்கும் தேவையான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.