• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சுகாதார முறைமை மேம்படுத்தல் கருத்திட்டத்தின் கீழ் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கான மதியுரைச் சேவையைப் பெற்றுக் கொள்ளல்
- சுகாதார முறைமை மேம்படுத்தல் கருத்திட்டத்தின் கீழ் வட மத்திய, மத்திய, சப்பிரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் உள்ள சுகாதார சேவை நிறுவனங்களினதும் மாவட்ட வைத்தியசாலைகளினதும் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கிணங்க, இந்த கருத்திட்டத்தின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்திக்கான வடிவமைப்பு மற்றும் மேற்பார்வை பணிகளை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரை கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு M/s. Resources Development Consultants (Pvt.) Ltd., நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.