• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நீண்டகால சிறுநீரகநோய் / காரணம் கண்டறியப்படாத நீண்டகால சிறுநீரக நோயாளர்கள் தொடர்பிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்வது தொடர்பில் ஒத்துழைப்பினை ஏற்படுத்திக் கொள்வதற்கான ஒப்பந்தங்களை செய்து கொள்ளல்
- வட மத்திய மாகண மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நீண்டகால சிறுநீரகநோய் / காரணம் கண்டறியப்படாத நீண்டகால சிறுநீரக நோய் பற்றி கூட்டாக ஆராய்ச்சிகளை ஆரம்பிப்பதற்கு அவுஸ்திரேலிய அணு விஞ்ஞான தொழினுட்ப அமைப்புடனும் காரணம் கண்டறியப்படாத நீண்டகால சிறுநீரக நோயை முன்னதாகவே அறிந்துக் கொள்வதற்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு ஐக்கிய அமெரிக்க குடியரசின் Stanford பல்கலைக்கழகத்துடனும் தரவுகளை பரிமாறிக் கொள்ளும் ஒப்பந்தங்களை செய்து கொள்ளும் பொருட்டு சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.