• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கி சட்டத்தை திருத்துதல்
- 2019 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட உரையின் மூலம் முன்மொழியப்பட்டு அங்கீகரிக்கப்பட்டவாறு வங்கித் துறையின் உள்ளூர் பங்குகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும் அதேபோன்று இலங்கையில் அதிகாரம் பெற்ற வணிக வங்கிகளின் ஏற்புக்குரிய தேவையினை பலப்படுத்தும் பொருட்டும் 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கி சட்டத்தின் கீழ் வௌியிடப்பட்ட 2007 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க கட்டளையை திருத்தும் பொருட்டு மாண்புமிகு பிரதம அமைச்சரினாலும் நிதி அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.