• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-11-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
சிறுவர்களை பாதுகாப்போம் - தேசிய நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு தொடர்ந்து நிதி நன்கொடைகளைப் பெற்றுக் கொள்ளல்
- சிறுவர்களை பாதுகாப்போம் - தேசிய நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு தேசிய லொத்தர் சபையின் ஊடாக செயற்படுத்தப்படும் வாரத்திற்கு ஒரு தடவை சீட்டிழுப்பு மேற்கொள்ளப்படும் லொத்தர் சீட்டொன்றை 2019‑11‑11 ஆம் திகதியன்று முதல் தடவையாக வௌியிடுவதற்கும் இந்த லொத்தர் சீட்டின் விலையிலிருந்து 10 சதவீதத்தினை சிறுவர்களை பாதுகாப்போம் - தேசிய நம்பிக்கை பொறுப்பு நிதியத்திற்கு வரவு வைப்பதற்குமாக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.