• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
குற்றமொன்றினால் பெறப்பட்ட ஆதனச் சட்ட
- அண்மைக்காலமாக உருவாகியுள்ள திட்டமிட்ட குற்றங்கள், சர்வதேச ரீதியாக விரிவடைந்துள்ள குற்றங்கள், பாரிய பொருளாதார நிதி குற்றங்கள் பெருமளவில் அதிகரித்துள்ளதன் காரணமாக இத்தகைய குற்றங்களை குறைப்பதற்கு அல்லது முற்றிலுமாக இல்லாதொழிப்பதற்கு குற்றமொன்றினால் பெறப்பட்ட ஆதனத்தினை மீளப் பெறுவதற்கு கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாகும். ஆதலால் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட விசேட சனாதிபதி செயலணியானது குற்றமொன்றினால் பெறப்பட்ட ஆதனச் சட்டம் சம்பந்தமாக கொள்கை மற்றும் சட்ட கட்டமைப்பொன்றை அபிவிருத்தி செய்துள்ளதோடு, இந்த கட்டமைப்பின் ஊடாக உத்தேச சட்டத்திற்கு கொள்கை வௌிப்படுத்தலும் செய்யப்பட்டுள்ளது. இதற்கிணங்க குற்றமொன்றினால் பெறப்பட்ட ஆதனம் தொடர்பிலான உத்தேச சட்டத்தில் கொள்கை மற்றும் சட்ட கட்டமைப்பிலுள்ள குறிக்கோள் மற்றும் உள்ளடக்கம் என்பவற்றை நடைமுறைப்படுத்துவதற்காக சட்டங்களை வரையுமாறு சட்டவரைநருக்கு ஆலோசனை வழங்கும் பொருட்டு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.