• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
காணாமற்போனமைக்கான மரண சான்றிதழை பெற்றுள்ளவர்களுக்கும் (காணப்படாமைக்கான சான்றிதல்களை அறிமுகப்படுத்த முன்னர் காணாமற்போன ஆட்களுக்கு வழங்கப்பட்ட மரணச் சான்றிதழ்) இடைக்கால நிவாரணம் வழங்குவதற்கு அங்கீகாரம் கோரல்
- காணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையை கவனத்திற்கு எடுத்துக் கொண்டு காணமற்போனவர்கள் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள மரண சான்றிதழ்களை இரத்துச் செய்து "காணாமற்போன மைக்கான சான்றிதழை" வழங்குவதற்கும் இவர்களின் குடும்பங்களுக்கு மாதாந்தம் 6,000/- ரூபா வீதமான இடைக்கால நிவாரண படியொன்றை வழங்குவதற்கும் அமைச்சரவையினால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆயினும், இவ்வாறு மரண சான்றிதழை இரத்துச் செய்து வழங்கப்படும் காணாமற்போனமைக்கான சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் இரண்டு வருடங்களாகும் என்பதனால் மரண சான்றிதழ்களை பெற்றுள்ள காணாமற்போனவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பல்வேறுபட்ட நிருவாக, சட்ட மற்றும் சமூக - பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுக்க நேர்ந்துள்ளது. ஆதலால், 1995 ஆம் ஆண்டின் 2 ஆம் இலக்க மரண பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மரண சான்றிதழ் ஒன்றில் மரணத்திற்கான காரணம் "காணமற்போனமை" அல்லது "இனந்தெரியாதோரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக உறவினர்களினால் தெரிவித்துள்ளமையினால் மரணம் அடைந்துள்ளாரென கருதப்படுகின்றார்" என்னும் கருத்தினை முன்வைக்கும் பதம் சேர்க்கப்பட்டிருந்தால் அல்லது 2010 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க மரண பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின் இரண்டாம் பிரிவின் கீழ் உரிய மரண சான்றிதழ்கள் வழங்கப்பட்டிருப்பின் "காணமற்போனமைக்கான சான்றிதழுக்கு" அமைவாக வழங்கப்படும் 6,000/- ரூபாவைக் கொண்ட மாதாந்த இடைக்கால நிவாரணப்படியை குறித்த ஆளின் குடும்பங்களுக்கும் வழங்குவதற்கு நிதி அமைச்சரினாலும் தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக முன்னேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சரினாலும் சமர்ப்பிக்கப்பட்ட கூட்டு பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.