• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வயதுவந்தோரின் புகையிலை பாவனை பற்றிய உலகளாவிய கணக்கெடுப்பினை மேற்கொள்தல் 2019 / 2020
- ஐக்கிய அமெரிக்க குடியரசின் தேசிய சுகாதார நிறுவனத்தினது நோய் கட்டுப்பாட்டு நிலையத்தின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார அமைப்பினால் வழங்கப்படும் மொத்த மதிப்பீட்டுச் செலவான 217,000 ஐக்கிய அமெரிக்க டொலர்களில் வயதுவந்தோரின் 2019 / 2020 புகையிலை பாவனை பற்றிய உலகளாவிய கணக்கெடுப்பினை மேற்கொள்வதற்காக தொகைமதிப்பு, புள்ளிவிபரவியல் திணைக்களத்திற்கு அனுமதி வழங்குவதற்கு பொருளாதார மறுசீரமைப்பு மற்றும் பொதுவழங்கல் அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சரின் கோரிக்கையின் பேரில் அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.