• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவி வழங்கும் நிலைபேறுடைய நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் பொதி 3: குருநாகல், இரத்தினபுரி, தம்புள்ளை மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் சுற்றாடல் முகாமைத்துவ சேவைகளுக்கான திட்டமிடல் விரிவான வடிவமைப்பு மற்றும் பெறுகை நோக்கங்களை செய்வதற்காக ஆலோசகர்களை இணைத்துக் கொள்வதற்கான ஒப்பந்தம்
- ஆசிய அபிவிருத்தி வங்கி கடன் உதவியின் கீழ் செயற்படுத்தப்படும் நிலைபேறுடைய நகர அபிவிருத்திக் கருத்திட்டத்தின் பொதி 3 இன் கீழ் குருநாகல், இரத்தினபுரி, தம்புள்ளை மற்றும் திருகோணமலை ஆகிய நகரங்களில் சுற்றாடல் முகாமைத்துவ சேவைகளுக்கான திட்டமிடல் விரிவான வடிவமைப்பு மற்றும் பெறுகை நோக்கங்களை செய்வதற்கான மதியுரை ஒப்பந்தத்தை அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட மதியுரைக் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு WAPCOS Limited, India sub Consultant with Summit Engineering Service and Consultants (Pvt) Ltd., Sri Lanka மற்றும் Project Management Associate International (Pvt) Ltd., Sri Lanka நிறுவனத்திற்கு கையளிக்கும் பொருட்டு மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.