• Increase font size
  • Default font size
  • Decrease font size

2019-10-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தேசிய மிருகக் காட்சிசாலைகள் திணைக்களத்தின் அபிவிருத்தி கருத்திட்டம் சார்பில் மதியுரை சேவைகளை பெற்றுக் கொள்வதற்கான கோரிக்
- தேசிய மிருக காட்சிசாலைகள் திணைக்களத்தின் கீழுள்ள தெஹிவலை மிருகக் காட்சிசாலை, பின்னவல யானைகள் சரணாலயம், பின்னவல மிருகக் காட்சிசாலை, ரிதியகம சவாரி பூங்கா மற்றும் கோணபொல பண்ணை போன்ற நிறுவனங்களின் அடிப்படை வடிவமைப்புகளை தயாரிக்கும் பொருட்டு மத்திய பொறியியல் உசாத்துணை பணியகம், அரச பொறியியல் கூட்டுத்தாபனம், அரசாங்க அபிவிருத்தி, நிர்மாணக் கூட்டுத்தாபனம், கட்டடங்கள் திணைக்களம் மற்றும் நகர அபிவிருத்தி அதிகாரசபை போன்ற நிறுவனங்களிடமிருந்து மதியுரைச்சேவை பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. இந்த சகல நிர்மாணிப்பு பணிகளும் 2022 ஆம் ஆண்டின் இறுதியில் பூர்த்திசெய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளமையினால் உரிய நிர்மாணிப்பு பணிகளின் தன்மை, உட்சிக்கல்வாய்ந்த நிலைமை மற்றும் இந்த விடயநோக்கெல்லை சம்பந்தமாக உரிய நிறுவனங்களின் அனுபவம் என்பவற்றின் அடிப்படையில் குறித்த நிர்மாணிப்புகளுக்கான மதியுரைச் சேவைகளை இந்த நிறுவனங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் பொருட்டு சுற்றுலா அபிவிருத்தி, வனசீவராசிகள் மற்றும் கிறித்தவ சமய அலுவல்கள் அமைச்சரினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.